இலங்கையில் உண்மை, ஒற்றுமை, நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுச் சட்டமூலத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம்

161 0

இலங்கையில் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுச் சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்காக 2023.12.18 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பின்னர், பல்வேறு தரப்பினர் இச்சட்டமூலத்திற்கு மேலும் திருத்தங்களை முன்மொழிந்தமையால், குறித்த சட்டமூலத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான இடைச் செயலகத்தின் ஆலோசனைக் கலந்துரையாடல்கள் சுற்றுக்கள் நடாத்தப்பட்டு, இச்சட்டமூலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளன.

அத்திருத்தங்களை உள்ளடக்கி அடிப்படைச் சட்டமூலத்திற்கமைய, சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கும், இதற்கு முன்னர் இச்சட்டமூலத்திற்காக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்வதற்கும் ஜனாதிபதி, நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அவர்களும் இணைந்து இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.