நானுஓயா புகையிரத நிலையத்தை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டத்தைப் பூர்த்தி செய்ய தீர்மானம்

94 0

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின் நிதியைப் பயன்படுத்தி நானுஓயா புகையிரத நிலையத்தை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2023.04.03 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கட்டுமானப் பொருட்களின் விலை அதிகரிப்பால் நானுஓயா புகையிரத நிலையத்தை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கான ஒப்பந்தப் பெறுமதி 74.63 மில்லியன் ரூபா 101.81 மில்லியன் ரூபா வரைக்கும் அதிகரித்துள்ளது.

அதற்கமைய, புதிய திருத்தப்பட்ட மதிப்பீட்டின் கீழ் இலங்கை புகையிரத திணைக்களம் மற்றும் பொறியியல் பணிகள் தொடர்பான மத்திய ஆலோசனைப் பணியகம் மூலம் குறித்த நவீனமயப்படுத்தல் பணிகளைப் பூர்த்தி செய்வதற்கும், அதற்குத் தேவையான மேலதிக தொகையை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின் மூலம் பெற்றுக் கொள்வதற்கும் சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது