இந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, அமெரிக்கர்களை அப்பகுதியில் இருந்து விலகி இருக்குமாறு ஓமானில் உள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரேபிய தீபகற்பத்தின் தென்கிழக்கில் தனித்தன்மை வாய்ந்த நாடான ஓமானில் இத்தகைய வன்முறைகள் இடம்பெறுவது அரிதான ஒன்றாகும்.

