முச்சக்கர வண்டி கட்டணம் குறைப்பு – இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம்

121 0

மேல் மாகாணத்தில் திங்கட்கிழமை (15) நள்ளிரவு முதல் முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

முதலாவது கிலோமீட்டருக்கான கட்டணம் 100 ரூபாவும் இரண்டாவது கிலோமீட்டருக்காக அறவிடப்படும் கட்டணத்தில் 10 ரூபாவினால் குறைக்கப்படும் என அதன் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, மேல் மாகாணத்திற்குள் முதலாவது கிலோமீட்டருக்கான கட்டணம் 100 ரூபா எனவும் இரண்டாவது கிலோமீட்டர் முதல் 90 ரூபா அறவிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.