காலி சிறைச்சாலையில் மற்றுமொரு கைதி உயிரிழப்பு!

42 0

காலி சிறைச்சாலையில் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த கைதி மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சனிக்கிழமை (13) உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மேலும் மூன்று கைதிகள் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.