சாவகச்சேரி வைத்தியசாலையில் இடம்பெற்ற பல பயங்கர சம்பவங்கள்

20 0

சாவகச்சேரி வைத்தியசாலையில் இடம்பெற்று வந்த ஊழல்கள் மற்றும் பிரச்சினைகளை வைத்தியர் அர்ச்சுனா அம்பலப்படுத்தியமையினாலேயே அவருக்கான எதிர்ப்புகள் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மக்கள் இதனை கூறியுள்ளனர்.

வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறுவதற்கான செல்லும் நோயாளிகளுக்கு இதுவரை சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படவில்லை என மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதேவேளை, சிக்கலான நோயுடன் வைத்தியசாலையை மக்கள் நாடும் போது சரியான வைத்திய ஆலோசனைக்கூட வழங்க முடியாத நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலை காணப்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான பிரச்சினைகளை தீர்ப்பதற்றகாகவும் ஊழல்களை அம்பலப்படுத்தவும் சாவகச்சேரி வைத்தியசாலையின் வைத்தியர் அர்ச்சுனா நடவடிக்கை எடுக்க முற்பட்டதன் காரணமாகவே அவருக்கான எதிர்ப்புகள் தற்போது அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.