பாரா ஒலிம்பிக்கில் தேர்வான தமிழக வீராங்கனைக்கு உதயநிதி வாழ்த்து

21 0

பாரீஸில் நடைபெற உள்ள பாரா ஒலிம்பிக் 2024 – ல் மகளிருக்கான 67 கிலோ எடைப் பிரிவு பளுதூக்கும் போட்டிக்கு தேர்வாகியுள்ள கஸ்தூரி ராஜாமணியை இன்று நேரில் சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்,

இது குறித்த அவரது எக்ஸ் தள பதிவில், “தமிழ்நாட்டிலிருந்து ஒலிம்பிக்கில் களம் காணும் 16 ஆவது நபராக தேர்வாகியுள்ள வீராங்கனை கஸ்தூரி ராஜாமணியின் விமானப் பயணச் செலவு – தங்குமிடம் – உணவு – பயிற்சி மற்றும் இதர செலவுகளுக்காக ரூ. 7 லட்சத்திற்கான காசோலையை தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையில் இருந்து வழங்கினோம்.

தங்கை கஸ்தூரி ராஜாமணி சர்வதேச அரங்கில் வெற்றி வாகை சூடி இந்தியாவிற்கும் – தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்கட்டும்\” என்று பதிவிட்டுள்ளார்.