உமா குமரன் வெற்றி பெற்றுள்ளார்

60 0

பிரித்தானிய தேர்தலில் கவனம் ஈர்த்துவந்த இலங்கைத் தமிழ் பின்னணி கொண்ட பெண் வேட்பாளரான உமா குமரன் வெற்றி பெற்றுள்ளார்.

இலங்கையிலிருந்து யுத்தத்துக்குத் தப்பி பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்த தமிழர்களான தம்பதியரின் மகள் உமா குமரன்.

லேபர் கட்சி சார்பில், Stratford and Bow தொகுதியில் போட்டியிட்ட உமா குமரன், அத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

பிரித்தானிய தேர்தலில் இலங்கைத் தமிழ் பின்னணி கொண்ட பெண் வேட்பாளர்: தேர்தல் முடிவுகள் | Female Candidate Of Sri Lankan Tamil In Uk

 

உமா குமரன், 19,145 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரது தொகுதியில் போட்டியிட்ட கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளரான கேன் பிளாக்வெல், 3,144 வாக்குகள் மட்டுமே பெற்று நான்காவது இடத்தையே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பிரித்தானிய தேர்தலில் இலங்கைத் தமிழ் பின்னணி கொண்ட பெண் வேட்பாளர்: தேர்தல் முடிவுகள் | Female Candidate Of Sri Lankan Tamil In Uk