முன்னோக்கி பயணிப்பதற்கான பாதை குறித்தும் தமிழ் சமூகம் சிந்திப்பது அவசியமாகும்!

35 0
image
தமிழ்மக்களின் உரிமைகளை ஆதரிப்பது மற்றும் வரலாற்று அநீதிகளிற்கு தீர்வை காண்பது குறித்த கென்சவேர்ட்டிவ் கட்சியின் அர்ப்பணிப்பு உறுதியாக உள்ளது  என கென்சவேர்ட்டிவ் கட்சியின் கார்சல்டன் மற்றும் வலிங்டன் வேட்பாளர் எலியட் கோல்பேர்ன் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனின் நாடாளுமன்ற தேர்தலிற்கு முன்னதாக தமிழ் கார்டியனில் எழுதியுள்ள கட்டுரையில்  அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

தமிழ்சமூகத்தின் நீண்டகால சகா என்ற அடிப்படையில் தமிழ் சமூகத்தினை பிரதிநிதித்துவப்படுத்துவது குறித்தும் பகிர்ந்துகொள்ளப்பட்ட விழுமியங்கள் பரஸ்பர மதிப்பு நீதி மற்றும் செழிப்பு ஆகியவற்றிற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்காக போராடுவது குறித்தும் நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

நாங்கள் மிக முக்கியமான தேர்தலை நெருங்கும் இவ்வேளையில் நாங்கள் ஒன்றிணைந்து சாதித்த முன்னேற்றங்கள் குறித்தும் முன்னோக்கி பயணிப்பதற்கான பாதை குறித்தும்  தமிழ் சமூகம் சிந்திப்பது அவசியமாகும்.

தமிழ் மக்களிற்கான தொடர்ச்சியான அர்ப்பணிப்பை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வெளிப்படுத்திய கென்சவேர்ட்டிவ் கட்சிக்கு வாக்களிக்குமாறு நான் உங்களை கேட்டுக்கொள்கின்றேன்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் போது இடம்பெற்ற சம்பவங்களிற்கு ஐக்கிய நாடுகளில் பொறுப்புக்கூறும்நடவடிக்கைகளிற்கு பிரிட்டன் தலைமை தாங்கிவந்துள்ளது.

இந்த கொள்கைகளிற்கான எங்கள் அர்ப்பணிப்பு குறையவில்லை தடம்மாறவில்லை.

இலங்;கையை சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்துவது குறித்த துணிச்சலான வாக்குறுதிகளை தொழில்கட்சி வழங்கியுள்ள அதேவேளை உண்மையான மாற்றத்திற்கு சொல்லாட்சியைவிட அதிகம் தேவை என்பதை நினைவில் கொள்வது அவசியம்.

மேலும் சர்வதேச அரங்கில் நிலையான பயனுள்ள நிலையான நடவடிக்கை அவசியம்.இவ்வாறான நடவடிக்களை கென்சவேர்ட்டிவ் கட்சி தொடர்ந்து முன்னெடுத்துவருகி;ன்றது.தொடர்ந்தும் முன்னெடுக்கும்.உதாரணத்திற்கு எங்களின் 11மில்லியன் யூரோ இலங்கையின் யுத்தத்தின் பாரம்பரியத்திற்கு தீர்வை காண்பதற்கு உதவும்.மேலும் இந்த நிதி உதவி சிவில்சமூகத்திற்கு உதவும் ஜனநாயக செயற்பாடுகளிற்கும் உதவும்.

தமிழர் நினைவுநாள் என்பது உயிர் இழந்தவர்களின் நினைவுகளை போற்றும் மற்றும் தமிழ் சமூகத்தின் தொடரும் வேதனையை அங்கீகரிக்கும் ஒரு புனிதமான நிகழ்வாகும்.

எங்களை துயரத்திலும் நீதியை காண்பதற்கான உறுதிப்பாட்டிலும் இணைக்கும் நாள்

கன்சவேர்ட்டிவ் கட்சி இந்த நாளின் முக்கியத்துவத்தை அங்கீகரித்து உங்களுடன் இந்த நாள் குறித்த நினைவிலும் உறுதிப்பாட்டிலும் உங்களுடன் இணைந்துள்ளது.

தமிழர்களை உரிமைகளை ஆதரிப்பதிலும் வரலாற்று அநீதிகளிற்கும் எங்களின் அர்ப்பணிப்பு உறுதியாக உள்ளது.

மேலும் இந்த ஆண்டு நினைவுகூரல் நிகழ்வில் கலந்துகொண்டது குறி;த்து பெருமிதம் கொள்கின்றேன்.