அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமுனை மக்பூலியா பகுதியில் கேரள கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில் பொலிஸார் பெரும் சிரமத்துக்கு மத்தியில் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
கைதானவர் 36 வயதுடைய குடும்பஸ்தர் என்பதுடன் அவர் வசமிருந்து 11,100 மில்லி கிராம் கேரள கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மேலும், சந்தேக நபர் தொடர்பில் பெரிய நீலாவணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்வதுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

