கரடியனாறில் விபத்து ; இளம் குடும்பஸ்தர் பலி!

104 0

மோட்டார் சைக்கிள் – வேன் விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை (29) கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உறுகாமம் பதுளை வீதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் செங்கலடி சேனைக்குடியிருப்பை சேர்ந்த 35 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான ஒருவரே உயிரிழந்துள்ளார் .

இவர் தொழில் நிமிர்த்தம் பெரிய புல்லுமலை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது, எதிரே வந்த மினி வேன் பாதை மாறி குறித்த நபர் மீது மோதியதில் இந்த விபத்து இம்பெற்றுள்ளது .

வேனின் சாரதியின் தூக்கமே விபத்துக்கான காரணமென பொலிஸாரின் விசாரணைகளின் போது  தெரியவந்துள்ளது.

கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுகோளை ஏற்று சம்பவ இடத்துக்கு சென்ற மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை முன்னெடுத்து பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சடலத்தை அனுப்பி வைத்துள்ளார்.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன்  குறித்த விபத்து தொடர்பில் கரடியனாறு பொலிஸார் வேனின் சாரதியை கைது செய்து  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.