முச்சக்கரவண்டி – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

115 0
தெல்தெனிய மற்றும் திகன ஆகிய பகுதிகளுக்கு இடையில் கோனவல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று (28) வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

முச்சக்கரவண்டி ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது முச்சக்கரவண்டி சாரதியும் மோட்டார் சைக்கிள் சாரதியும் படு காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.