எம்பிலிப்பிட்டியவில் விபத்து ; பெண் பலி ; ஒருவர் காயம்

98 0

இரத்தினபுரி பிரதேசத்தில் எம்பிலிப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எம்பிலிப்பிட்டிய – மித்தெனிய வீதியில் எம்பிலிப்பிட்டிய பொது வைத்தியசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எம்பிலிப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (27) வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.

மித்தெனிய நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் பயணித்த பெண் பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது மோட்டார் சைக்கிள் சாரதியும் பெண் பாதசாரியும் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பெண் பாதசாரி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 73 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எம்பிலிப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.