ஹக்மனையில் பொலிஸ் உத்தியோகத்தர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

146 0

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக ஹக்மனை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (27) வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.

ஹக்மனை, பொத்தேவெல பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய தங்காலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் நேற்று (27) கடமையில் இருக்கும் போது தான் சுகயீனமுற்று இருப்பதாகக் கூறி கடமைகளை முடித்துவிட்டு தனது வீட்டுக்குச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர், இவர் தனது வீட்டில் வைத்து தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர் நீண்ட காலமாகத் தனது மனைவியுடன் முரண்பாட்டில் ஈடுபட்டிருந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹக்மனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.