மூதூர் – இருதயபுர மக்களின் போராட்டக்களத்துக்கு அருட்தந்தையர்கள், அரசியல்வாதிகள் விஜயம்

147 0

திருகோணமலை மூதூர் இருதயபுரம் பகுதியில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக போராடிவரும் மக்களை புதன்கிழமை (26) அருட்தந்தையர்கள், சமூக ஆர்வலர்கள், பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப், இலங்கை தமிழ் அரசு கட்சியின் மாவட்ட கிளை தலைவர் சண்முகம் குகதாசன் ஆகியோர் சந்தித்து அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக கலந்துரையாடினர்.

மூதூர் இருதய புரத்தில் ஆரம்பிக்கப்பட்ட மதுபான சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 15 நபர்களை மூதூர் பொலிஸார் செவ்வாய்க்கிழமை (25)கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது அவர்களை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

குறித்த நபர்கள் அனுமதி இன்றி ஒன்று கூடியமை, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை, பொலிஸாரை தாக்கியமை போன்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.