அவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்… எம்பாப்பே உட்பட பிரெஞ்சு விளையாட்டு நட்சத்திரங்கள் வேண்டுகோள்

156 0

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் தீவிர வலது சாரிகளை ஆதரிக்க வேண்டாம் என்று கைலியன் எம்பாப்பே உட்பட விளையாட்டு நட்சத்திரங்கள் பலர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தீவிர வலதுசாரிகளை நிராகரிக்க

200 க்கும் மேற்பட்ட பிரெஞ்சு விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு பிரமுகர்கள் தீவிர வலதுசாரிகளை நிராகரிக்க வலியுறுத்தி வாக்காளர்களுக்கு அழைப்பு விடுக்கும் திறந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

அவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்... எம்பாப்பே உட்பட பிரெஞ்சு விளையாட்டு நட்சத்திரங்கள் வேண்டுகோள் | French Sports Stars Urge Public

இது குடிமக்களுக்கான கடமை மட்டுமல்ல, நாட்டை நேசிக்கும் செயல் என்றும் விளக்கமளித்துள்ளனர். முதற்கட்ட வாக்கெடுப்புக்கு முன்னர் உத்தியோகப்பூர்வ தேர்தல் பரப்புரைகள் தொடங்க இன்னும் 2 வாரங்கள் உள்ளன.

இந்த நிலையிலேயே தீவிர வலதுசாரி அரசியல்வாதிகள் மக்களிடையே அச்சம் விதைத்து நம்மை பிரித்தாள முயல்வதாக விளையாட்டு நட்சத்திரங்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

நாட்டில் ஏற்றத்தாழ்வுகள், எதிர்காலம் குறித்த அச்சம், வேலையின்மை, பொருளாதார நெருக்கடி என அனைத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ள விளையாட்டு நட்சத்திரங்கள், நமது நாட்டை தீவிர வலதுசாரிகள் கைப்பற்றுவதை ஏற்க முடியாது என குறிப்பிட்டுள்ளனர்.

மக்கள் புறக்கணிக்க வேண்டும்

ஜூன் 30ம் திகதி மற்றும் ஜூலை 7ம் திகதி முன்னெடுக்கப்படும் தேர்தல் வாக்குப்பதிவானது, வெறும் ஜனநாயக கடமை மட்டுமல்ல, தீவிர வலதுசாரிகள் அதிகாரங்களை கைப்பற்றுவதால் அச்சம் கொள்ளும் ஒரு சமூகத்திற்கு ஆதரவாக நாம் ஒன்று திரண்டு வாக்களிக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

அவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்... எம்பாப்பே உட்பட பிரெஞ்சு விளையாட்டு நட்சத்திரங்கள் வேண்டுகோள் | French Sports Stars Urge Public

 

அதில், Yannick Noah, Serge Betsen, Marie-José Perec, Marion Bartoli என முதன்மையான விளையாட்டு நட்சத்திரங்கள் கையெழுத்திட்டுள்ளனர். முன்னதாக பிரான்ஸ் கால்பந்து நட்சத்திரம் கைலியன் எம்பாப்பே மற்றும் அவரது சக வீரர் Marcus Thuram ஆகிய இருவரும்

National Rally மற்றும் Reconquest party ஆகிய இரண்டையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று வெளிப்படையாக கருத்து தெரிவித்திருந்த நிலையிலேயே 200 க்கும் மேற்பட்ட பிரெஞ்சு விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு பிரமுகர்கள் வெளிப்படையாக தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.