தருவோர் பெறுவோர் இருவரும் வாழ்க… வைரமுத்து பக்ரீத் வாழ்த்து

112 0

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் ரம்ஜான் பண்டிகைக்கு அடுத்தபடியாக கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை பக்ரீத் ஆகும். இறைவனின் தூதரான இப்ராகிமின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில், தமிழகம் முழுவதும் இன்று இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். இஸ்லாமியர்களுக்கு பக்ரீத் வாழ்த்து தெரிவித்து கவிஞரும், பாடலாசிரியருமான கவிஞர் வைரமுத்து எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,குடும்பம் நிறுவனம் அரசுஎன்ற எந்த அமைப்பும்யாரோ ஒருவரின்தியாகத்தை முன்வைத்தேகட்டமைக்கபடுகிறதுஅந்த தியாகத்தைக்கொண்டாட்டக்குறியீடாகக் கொள்ளும் பக்ரீத்சக மனிதனைநேசிக்கச் சொல்கிறதுஅண்டை வீட்டாருக்கும்ஏழைகளுக்கும்ஈகைப் பண்பாட்டை போதிக்கிறதுகுறிக்கோள் மிக்கஇந்தக் கொண்டாட்டத்தைவாழ்த்துவதில்மகிழ்ச்சி அடைகிறோம்தருவோர் பெறுவோர்இருவரும் வாழ்கஇவ்வாறு வைரமுத்து தெரிவித்துள்ளார்.

குடும்பம் நிறுவனம் அரசு
என்ற எந்த அமைப்பும்
யாரோ ஒருவரின்
தியாகத்தை முன்வைத்தே
கட்டமைக்கபடுகிறது

அந்த தியாகத்தைக்
கொண்டாட்டக்
குறியீடாகக் கொள்ளும் பக்ரீத்
சக மனிதனை
நேசிக்கச் சொல்கிறது

அண்டை வீட்டாருக்கும்
ஏழைகளுக்கும்
ஈகைப் பண்பாட்டை
போதிக்கிறது

குறிக்கோள் மிக்க
இந்தக் கொண்டாட்டத்தை
வாழ்த்துவதில்
மகிழ்ச்சி அடைகிறோம்

தருவோர் பெறுவோர்
இருவரும் வாழ்க