அமெரிக்காவின் சிறைச்சாலை சமஸ்டி பணியகம் இதனை தெரிவித்துள்ளது.
நிக்கில் குப்தா என்பவரே நாடு கடத்தப்பட்டுள்ளார்.
நிக்கில் குப்தாக காலிஸ்தானிற்காக குரல்கொடுத்த குர்பட்வன்ட் சிங் பனுன் என்பவரை கொலை செய்ய திட்டமிட்டார் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
செக்குடியரசிற்கு சென்றவேளை கடந்தவாரம் நிக்கில் குப்தா கைதுசெய்யப்பட்டார்.தான் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படவேண்டும் என்ற அவரது மனுவை நீதிமன்றமொன்று நிராகரித்திருந்தது.
இதனை தொடர்ந்து அவர் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கான நிலை உருவானது.
நிக்கில் குப்தா புரூக்ளினின் மெட்ரோபொலிட்டன் தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

