வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மிலானோ வகையான சிகரெட், ஹேஸ் வகையான போதைப்பொருள் மற்றும் கஞ்சா ஆகியவற்றுடன் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக ஹிங்குருகடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
ஹிங்குருகடுவ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய ஹிங்குருகடுவ பொலிஸ் குழு ஒன்று எத்பட்டிய பகுதிக்கு சென்று சந்தேகத்துக்கு இடமான வீட்டை சுற்றி வளைத்து தேடுதலை மேற்கொண்ட போது சிகரெட் உட்பட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், 35 வயதுடைய எத்பட்டிய பிபிலேகம பகுதியை சேர்ந்த சந்தேக நபரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மிலானோ வகையான சிகரெட் 240 , 15 கிராம் கஞ்சா, 5 மில்லி கிராம் ஹேஷ் ரக போதைப்பொருள் ஆகியவை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபரை பசறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஹிங்குருகடுவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

