ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து, முச்சக்கரவண்டியொன்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கொட்டகலை வைத்தியசாலைக்கு அருகாமையில் இன்று (16) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதியும் வாகனத்தில் பயணித்த ஏனைய மூவரும் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளங்கன் மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளில் கொட்டகலை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

