இசை நிகழ்ச்சியில் நடனமாடிக்கொண்டிருந்த இளைஞர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை!

102 0

களுத்துறை, கமகொட பிரதேசத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

தொடங்கொட, ஜன உதான பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்கிய நபர் அதே பிரதேசத்தில் வசிக்கும் பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளதாகவும், சில நாட்களுக்கு முன்பு அவரது மனைவியை விட்டுப் பிரிந்து தனியே வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த இசை நிகழ்ச்சியை பார்வையிடச் சென்ற மனைவி, தான் பணி புரியும் ஆடை தொழிற்சாலையில் இளைஞர் ஒருவருடன் சேர்ந்து நடனமாடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மனைவி இளைஞருடன் நடனமாடுவதை கண்ட சந்தேக நபர், நடனமாடிக்கொண்டிருந்தவரின் கழுத்தை கூரிய ஆயுதத்தால் அறுத்து கொலை செய்துள்ளதாக மேலும் பொலிஸார் தெரிவித்தனர்.