துரித நடவடிக்கையால் பாரிய கொள்ளை முயற்சி தடுக்கப்பட்டது

111 0
கொழும்பு, மொரட்டுமுல்ல பிரதேசத்தில் உள்ள நகை அடகு பிடிக்கும் கடையொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் அங்கிருந்த பணியாளர்களை அச்சுறுத்தி கொள்ளையிட முயன்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று (15) சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் நகை அடகு பிடிக்கும் கடையில் பணிபுரிந்த பெண் ஒருவர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளார்.

இதனையடுத்து, கொள்ளையர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மொரட்டுமுல்ல பொலிஸார் மற்றும் மொரட்டுவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.