பிரான்சில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால்… புலம்பெயர்ந்தோருக்கு அச்சத்தை உருவாக்கியுள்ள செய்தி

132 0

பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தல் அறிவித்துள்ளார். பிரான்சில் வலதுசாரிக் கட்சிகள் மக்களின் ஆதரவைப் பெற்றுவரும் நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த ஒருவர் பிரதமராவார் என்றால், புலம்பெயர்ந்தோர் நிலை என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதற்குக் காரணம், பிரதமராவார் என எதிர்பார்க்கப்படும் நபரும், அவர் சார்ந்த கட்சியும் புலம்பெயர்தல் எதிர்ப்புக் கொள்கை கொண்டவர்கள் ஆவர்.

பிரான்சின் எதிர்க்கட்சிகளில் ஒன்றான National Rallyயின் கட்சித்தலைவரான ஜோர்டன் பார்டெல்லா (Jordan Bardella, 27) என்பவர்தான் பிரான்சின் அடுத்த பிரதமராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஜோர்டன் சார்ந்த National Rallyயின் தலைவரான Marine Len Pen, நேற்று தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

வெளிநாட்டவர்களின் நிலை என்ன?

புலம்பெயர்தல் எதிர்ப்பு கட்சி என பெயர் பெற்றுள்ள National Rally கட்சி, தனது கட்சியின் முக்கிய இலக்குகளில் ஒன்று சட்டப்பூர்வ மற்றும் சட்டவிரோத புலம்பெயர்தலை கடுமையாக குறைப்பதாகும் என்று கூறியுள்ளது.

அதாவது, எந்த கட்சியானாலும், சட்டவிரோத புலம்பெயர்தலை கடுமையாக குறைப்போம் என்று கூறுவது சாதாரண விடயம்தான். ஆனால், National Rally கட்சியோ, சட்டப்பூர்வ புலம்பெயர்தலையும் கடுமையாக குறைப்போம் என்று தனது வாக்குறுதிகளில் கூறியுள்ளது.

பிரான்சில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால்... புலம்பெயர்ந்தோருக்கு அச்சத்தை உருவாக்கியுள்ள செய்தி | Change Of Regime In France Fear For Immigrants

 

ஆக, அக்கட்சி வெளிநாட்டவர்களுக்கு விசா மற்றும் குடியிருப்பு அனுமதிகள் வழங்குவதைக் கட்டுப்படுத்துதல் மூலம் வெளிநாட்டவர்கள் பிரான்சுக்கு வருவதைக் கட்டுப்படுத்தலாம். அத்துடன், ஏற்கனவே பிரான்சில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கு தொந்தரவு கொடுத்து அவர்களாகவே நாட்டை விட்டு வெளியேறச் செய்யலாம்.

ஆக மொத்தத்தில், National Rally கட்சி ஆட்சிக்கு வருமானால், வெளிநாட்டவர்கள் பிரான்ஸ் வருவதற்கு கட்டுப்பாடுகள் கடுமையாகலாம் என்றும், பிரான்சில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுவதால் புலம்பெயர்ந்தோர் நிலைமை கடினம்தான் எனலாம்.

பிரான்சில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால்... புலம்பெயர்ந்தோருக்கு அச்சத்தை உருவாக்கியுள்ள செய்தி | Change Of Regime In France Fear For Immigrants