சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் பொலிஸாரால் கைப்பற்றல் !

112 0

அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பீடி இலைகள்  இன்று வெள்ளிக்கிழமை (07) பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

புத்தளம் கலப்பு கரையோரப்பகுதியில் பீடி இலைகள் மூடைகள் இருப்பதை கண்டு   மீனவர்கள் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

இதன்போது சுமார் 19 உரைகளில் 513 கிலோ கிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பீடி இலைகள் சுமார் 25 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியென மதிப்பிடப்படுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

கைப்பற்றப்பட்ட பீடி இலைகளை புத்தள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.