பதுளையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

116 0

பதுளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பதுலுபிட்டி பகுதியில் 5220 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 28 வயதுடைய பதுளை கிரீன்லாந்து டிரைவ், பதுலுபிட்டிய பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் இன்று வெள்ளிக்கிழமை (07) பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.