மலையக பெருந்தோட்ட தோட்ட தொழிலாளர்களின் 1,700 ரூபாய் சம்பள விடயத்தில் நீதிமன்றத்தில் பெருந்தோட்ட நிறுவனங்கள் மூக்கருத்து போயிருக்கிறது என கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாசலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இடம் பெற்ற அமர்வின் போது கல்வி இராஜாங்க அமைச்சர் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் அரவிந்தகுமார்,
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள நிலமையினை கருத்தில் கொண்டு ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க அவர்களின் வழிகாட்டலில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஊடாக வர்த்தமானி ஊடாக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை 1,700 ரூபாவாக பிரகடனபடுத்தியிருக்கிறார்.
இந்த சம்பள அதிகரிப்பு என்பது வரவேற்க்கதக்க விடயம் ஆனால் அந்த தொகையினை வழங்குவதற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் தயாராக இல்லை வர்த்தமானி வெளியீட்டவுடன் தங்களது நிலைப்பாட்டை தொழில் அமைச்சுக்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் அறிவித்தனர் ஆனால் பெருந்தோட்ட நிறுவனங்களின் நிலைப்பாட்டை தொழில் அமைச்சு ஏற்றுக் கொள்ளவில்லை.
நீதிமன்றம் சென்ற பெருந்தோட்ட நிறுவனங்கள் தடை உத்தரவினை கோரியிருந்த போதும் அந்த தடை உத்தரவினை நீதிமன்றம் நிராகரித்தது ஆகவே தோட்ட தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் சம்பளத்தை வழங்கியே ஆகவேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு வந்துள்ளது அவ்வாறு இந்த சம்பளத்தினை வழங்காவிட்டால் பெருந்தோட்ட நிறுவனங்கள் பெருந்தோட்டங்களை அரசாங்கத்திற்கு வழங்கிவிட்டு வெளியேற வேண்டும்.
கல்வியின் சீர் திருத்தபணியில் இருந்து நாங்கள் தீவிரமாக செயற்பட்டு கொண்டிருக்கின்றோம் இந்த சீர் திருத்த பணி வெகுவிரைவில் அமுல்படுத்தவிருக்கிறது அவ்வாறு அமுல்படுத்தபடும் போது எமது நாடு கல்வியில் ஒரு பாரிய மாற்றத்தை கொண்டிருக்கும்.
ஆசிரியர் பற்றாக்குறைகளை நாம் சிறிது சிறிதாக தீர்த்து வருகிறோம் அதேபோல் தரம் 03 அதிபர் சேவையினை வழங்கினோம் பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிக்கும் அந்த பணி மாகாண மட்டத்திலும் கல்வி அமைச்சின் மட்டத்திலும் முன்னெடுக்கப்பட்டு கொண்டு இருக்கிறது என தெரிவித்தார்.

