’நீதி வென்றுள்ளது’

149 0

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைக்கப்பெற்ற மாபெரும் வெற்றியாகவே இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை காண்கின்றது எனத் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், அதிகரிக்கப்பட்ட சம்பளம், பெருந்தோட்ட தொழிலாளர்களை முறையாக சென்றடைவதற்கும் தொழிற்சங்கம் என்ற ரீதியில் தொழிலாளர்கள் பக்கம் பக்க பலமாக நின்று செயல்படுவோம் என்று தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானியை இரத்து செய்யக் கூறி  பெருந்தோட்ட நிறுவனங்கள்  மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்  வழக்கு தாக்கல் செய்திருந்தது.

அதற்கமைய, திங்கட்கிழமை (03) அவ்வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது கடந்த மாதம் 21 ஆம் திகதி வெளியிட்ட வர்த்தமானிக்கு எதிராக இடைக்கால தடையுத்தரவை வழங்க முடியாதென மேன்முறையீட்டு நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.