பதுளையில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி!

124 0

பதுளை, நுகே சந்தி பகுதியில் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள காணியொன்றில் மின்சாரம் தாக்கி  ஒருவர் உயிரிழந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (03) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பேவெல, ஹிதகொடை பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய இளைஞரொருவரே உயிரிழந்துள்ளார்.

வன விலங்குகளிடமிருந்து மரக்கறிகளைப் பாதுகாப்பதற்காக சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பிகளில் சிக்கியதில் இந்த மரணம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.