மதுபானசாலை ஒன்றில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று (30) காலை பிபிலை பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 37 வயதுடைய ஹாலி –எல, போகஹமதித்த பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவர் மதுபானசாலை ஒன்றை நடத்திவந்துள்ளார். இந்நிலையில், மதுபானசாலையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து, குறித்த ஊழியர் இரும்பு கம்பியால் அவரை தாக்கி கொலையை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய 34 வயதுடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

