வவுனியா பிரதி மாகாண விவசாய பணிப்பாளரின் அரச விடுதியை துப்பரவு செய்த திணைக்கள தொழிலாளர்கள் இருவர் குளவி கொட்டுக்கு இலக்காகி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
30ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அவர்களின் அரச விடுதியை துப்புரவு செய்யத் திணைக்கள தொழிலாளர்கள் இருவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இரு தொழிலாளர்களும் விடுதியை துப்புரவு செய்த போது அங்கிருந்த குளவிகள் களைந்து இருவருக்கும் கொட்டியதில் இருவரும் வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திணைக்கள தொழிலாளர்களான வே.நாகேந்திரன் (வயது 52), கோணேஸ்வரன் (வயது 46) ஆகிய இருவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

