கிளிநொச்சி பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பாடசாலை மாணவர்களுக்கான புத்தகப்பையில் கசிப்பு பொதிகளை கடத்தி வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன் போது மூன்று புத்தகப்பைகளில் இருந்து 30 லீட்டர் கசிப்பு பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
25 வயதுடைய இளைஞன் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் பேருந்தில் கசிப்பு கடத்தி வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையிலே இளைஞனை கைது செய்துள்ளதாகவும், விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

