பல்வேறு பிரதேசங்களில் நகைகளைத் திருடியுள்ளதாகக் கூறப்படும் சந்தேக நபரொருவர் நேற்று (29) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக ஜா-எல பொலிஸார் தெரிவித்தனர்.
கிம்புலாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் ஜா-எல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் ஜா-எல , பமுனுகம , சீதுவை , கந்தானை மற்றும் கட்டுநாயக்க ஆகிய பிரதேசங்களில் நகைகளைத் திருடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணையில் சந்தேக நபரிடமிருந்து 6 தங்க மாலைகள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜா-எல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

