நாட்டின் 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை (31) காலை 7 மணி வரை அமுலில் இருக்கும் வகையில் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய கொழும்பு, கண்டி, கேகாலை, குருணாகல், நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

