பாலஸ்தீனத்தை உத்தியோகபூர்வமாக அங்கீகரித்தன நோர்வே அயர்லாந்து ஸ்பெயின்

144 0

ஸ்பெயின் நோர்வே அயர்லாந்து ஆகிய நாடுகள் இன்று உத்தியோகபூர்வமாக பாலஸ்தீனிய தேசத்தை  அங்கீகரித்துள்ளன.

மத்திய கிழக்கில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சிகளை இரட்டிப்பாக்குவதற்காக இந்த நடவடிக்கை என இந்த நாடுகள் தெரிவித்துள்ளன.

மூன்றுநாடுகளும் தாங்கள் இந்த விடயத்தில் இணைந்து செயற்படுவதன் மூலம் ஏனைய ஐரோப்பிய நாடுகளையும் தங்களை பின்பற்ற செய்ய முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளதுடன்  இது காசாவில் யுத்த நிறுத்தம் பணயக்கைதிகள் விடுதலை போன்றவற்றிற்கான இராஜதந்திர முயற்சிக்கு உதவும் எனவும் தெரிவித்துள்ளன.

இஸ்ரேல் இதனை கடுமையாக எதிர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.