பிரித்தானியாவில் கட்டாய இராணுவ சேவை கொண்டுவரப்படும்., ரிஷி சுனக் வாக்குறுதி

129 0

“எதிர்காலத்தில் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சி அமைத்தால், தேசிய சேவை கட்டாயமாக்கப்படும். இது தேசிய உணர்வை உருவாக்கும்” என்று பிரதமர் ரிஷி சுனக் அறிவித்தார்.

கட்டாய தேசிய சேவையின் கீழ், 18 வயது இளைஞர்கள் ஒரு வருடத்திற்கு இராணுவத்தில் சேர வேண்டும் அல்லது ஆண்டுக்கு 25 நாட்கள் பொலிஸ் அல்லது தேசிய சுகாதார சேவை (NHS) போன்ற சமூக அமைப்புகளில் தன்னார்வலர்களாக ஆக வேண்டும்.

இதற்காக அரசு ஒவ்வொரு ஆண்டும் 2.5 பில்லியன் பௌண்ட்ஸ் ( இலங்கை பணமதிப்பில் ரூ.94,735 கோடி) செலவிடும்.
மே 25 அன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது சுனக் இவ்வாறு கூறினார்.

பிரித்தானியாவில் ஜூலை 4-ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்தத்தில் சுனக் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

கட்டாய சேவை தேசிய உணர்வை உருவாக்கும் என்றும் அது இளைஞர்களின் வாழ்க்கையை மாற்றும் வாய்ப்பை வழங்கும் என்றும் அவர் நம்புகிறார்.

Rishi Sunak, Rishi Sunak vows to bring back mandatory national service for 18-year-olds, UK mandatory national service, UK General Elections, பிரித்தானியாவில் தேசிய சேவை கட்டாயமாக்கப்படும்., ரிஷி சுனக் அறிவிப்பு

Conscription, அதாவது குறிப்பிட்ட வயது வரம்பு உள்ளவர்கள் தங்கள் நாட்டின் ராணுவத்தில் கட்டாயம் சேவை செய்ய வேண்டும் என்பதற்கான சரியான ஆங்கில வார்த்தை ஆகும்.

சுனக் தனது கட்சி ஒரு ஆட்சேர்ப்பு திட்டத்தை தயாரித்துள்ளதாக கூறியுள்ளார். பொதுத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்றால் ராயல் கமிஷன் அமைக்கப்படும். இந்த ஆணையம் தேசிய சேவை திட்டத்தை இறுதி செய்யும். இதற்குப் பிறகு, அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் முன்னோடித் திட்டம் தொடங்கப்படும் என்றார்.