வேன் விபத்தில் ஒருவர் பலி ; 10 பேர் காயம் !

123 0

பாதெனிய அனுராதபுரம் வீதியில் இன்று  ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பத்து பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குருணாகலிலிருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த யாத்திரியர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் காயமடைந்தவர்கள் கல்கமுவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் நால்வர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சாரதிக்கு நித்திரை ஏற்பட்டமையே விபத்துக்கான காரணம் என பொலிஸார்  சந்தேகிக்கின்றதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.