நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதி உதவியில், 4500 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட முல்லைத்தீவு மாங்குளம் ஆதார வைத்தியசாலை மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலையம் சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்துவைக்கப்பட்டது.
ஜனாதிபதி ரணில் பிரதமராக பதவி வகித்த 2017ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்த நிலையத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

