பிரான்சு கிளிச்சி நகரில் இடம்பெற்ற மே 18 தமிழின அழிப்பின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

44 0

மே 18 தமிழின அழிப்பின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு கிளிச்சி நகரில் அமைந்துள்ள திருகோணமலையில் படுகொலைசெய்யப்பட்ட பட்டினிக்கு எதிரான அமைப்பின் பணியாளர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபிப் பகுதியில் இடம்பெற்றது.

நேற்று 18.05.2024 சனிக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் நினைவுத் தூபி முன்பாக பொதுச்சுடரினை
திரு . பரராஜசிங்கம் (உப தலைவர் தமிழ்ச்சங்கம் கிளிச்சி) அவர்கள் ஏற்றிவைக்க,

1992 அன்று மணலாறுப் பகுதியில் வீரச்சாவடைந்த கப்டன் மணாளன் அவர்களின் சகோதரி ஈகைச்சுடர் ஏற்றிவைக்க 1991 அன்று ஆனையிறவுச் சமரில் வீரச்சாவடைந்த மாவீரர் வினோத் அவர்களின் தாயார் மலர் வணக்கம் செலுத்தினார்.
தொடர்ந்து கிளிச்சி தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் நெய் விளக்கு ஏற்றி வைத்தனர்.
கிளிச்சி துணை நகரபிதா, முன்னாள் நகரபிதா மற்றும் நகரசபை உறுப்பினர்கள் இவர்களோடு,
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள், தமிழ்ச்சோலை உறுப்பினர்கள், சங்கத் தலைவர்கள்,நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கிளிச்சி வாழ் தமிழ் மக்கள் கலந்து கொண்டு சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தியிருந்தனர்.
சிறப்புரைகள் மற்றும் நினைவுரைகளை

M.Richard, VINCENT conseiller municipale au devoir de mémoire

Monsieur Gilles CATOIRE
Ancienne Maire de CLICHY

Mme Michelle CAPDET
Membre de L’OEIE
மக்கள் பேரவைப் பொறுப்பாளர்
திரு.திருச்சோதி அவர்கள், கிளிச்சி தமிழ்ச்சோலை ஆசிரியை
திருமதி நர்மதா அமுதன் அவர்கள்,
மற்றும் தமிழ்ச்சோலை மாணவ மாணவிகள் ஆற்றியிருந்தனர்.

கலந்துகொண்ட கிளிச்சி துணை நகரபிதா மற்றும் கிளிச்சி தாநகர சபை conseil municipal திரு Richard VINCENT கருத்துரைக்கையில் முள்ளி வாய்க்காலில் நடந்த தமிழின அழிப்பினை முன்னிலைப்படுத்தி உரையாற்றியிருந்தார்.Clichy மாநகர சபைக்கும் கிளிச்சி தமிழ்ச்சங்கத்திற்குமான உறவினை மேலும் வலுப்படுத்த வேண்டியதையும் தொடர்ந்தும் தங்களது ஆதரவினை வழங்குவோம் என்றும் உறுதிபடக் கூறியிருந்தார்
முன்னாள் நகர பிதா M.Gille CATOIRE கருத்துரைக்கையில்,
2013 ஆம்ஆண்டு குறித்த தூபி ஆரம்பிக்கப்பட்ட போது, சிறிலங்கா அரசினால் இதற்கு கடும் நெருக்கடிகள் ஏற்படுத்தப்பட்டமை குறித்து நினைவு படுத்தியிருந்தார்.
இறுதியாக கிளிச்சி தம்மிழ்ச்சங்கத்தின் பொறுப்பாளர் திரு கந்தையா சச்சி உரையாற்றினார்.
அவர் தனது உரையில், 15 வது முள்ளிவாய்க்கால் நினைவு நாளைப்பற்றி விரிவாகக் கூறியதுடன் தமது சங்கத்தின் வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் நல்கும் மாநகர முதல்வர், நகரசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியுரைத்தார்.
முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சியும் வழங்கப்பட்டது.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவடைந்தது.