ரஷிய ராணுவ அகாடமியில் 2-ம் உலக போர் குண்டு வெடித்து 7 வீரர்கள் காயம்

15 0

ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள ராணுவ அகாடமியின் அடித்தளத்தில் 2-ம் உலக போர் குண்டு ஒன்று வெடித்தது. இதில் 7 வீரர்கள் காயம் அடைந்தனர்.

அகாடமியின் அடித்தள பகுதியை சுத்தம் செய்தபோது குண்டு வெடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த குண்டு 1941-ம் ஆண்டு முதல் 1945-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்த 76 மிமீ குண்டு ஆகும்.