முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கான பிதிர்கடன் நிறைவேற்றம்!

26 0

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கான பிதிர்கடன் நிறைவேற்றம்

யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் பிதிர்கடன்களை நிறைவேற்றலையும் இன்றைய தினம் இடம்பெற்றிருந்தது.

2009ஆம் ஆண்டு இடம்பெற்ற விடுதலை போராட்டத்திலே முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கான பிதிர்க்கடன் செய்யும் வழிபாடும், ஆத்ம சாந்திக்கான பிரார்த்தனையும் இன்றையதினம் காலை 7.30 மணி முதல் முள்ளிவாய்க்கால் கப்பல் வீதியிலே உள்ள கடற்கரை பகுதியில் விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இடத்தில் நடைபெற்றது.