பிரான்சு வில்நெவ், திரான்சி,சுவசிலுறுவா ஆகிய நகரங்களில் மே 18 தமிழின அழிப்புக்கு நீதிகோரிய கவனயீர்ப்பு நிகழ்வு‌.

80 0

பிரான்சு வில்நெவ் நகரில் மே 18 தமிழின அழிப்புக்கு நீதிகோரிய கவனயீர்ப்பு நிகழ்வு‌ பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் வில்நெவ் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தினால் இன்று (15.05.2024) புதன்கிழமை பிற்பகல் 14.00 மணிமுதல் இடம்பெற்றது.இந்நிகழ்வில் வில்நெவ் தமிழ்ச்சோலை மாணவர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டு சுடர்ஏற்றி, மலர்வணக்கம் செலுத்தினர். நிறைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது.

பிரான்சு திரான்சி நகரில் மே 18 தமிழின அழிப்புக்கு நீதிகோரிய கவனயீர்ப்பு நிகழ்வு‌ பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் திரான்சி பிராங்கோ தமிழ்ச்சங்கத்தினால் இன்று (15.05.2024) புதன்கிழமை பிற்பகல் 15.00 மணிமுதல் இடம்பெற்றது.
பொதுச்சுடரை திரான்சி நகரபிதா ஏற்றிவைத்தார்.
ஈகைச்சுடரினை முள்ளிவாய்க்காலில் வீரச்சாவடைந்த மேஜர் பாரதியின் சகோதரி ஏற்றிவைக்க , 09.06.1991 அன்று வீரச்சாவடைந்த 2 ஆம் லெப். மாணிக்கத்தின் சகோதரி மலர்வணக்கம் செலுத்தினார். தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் சுடர்ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.
தொடர்ந்து நினைவுரைகள், திரான்சி தமிழ்ச்சோலை மாணவ மாணவியரின் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு தொடர்பான கவிதை, பாடல், நடனம் போன்ற நிகழ்வுகளும் இடம்பெற்றன.திரான்சி மாநகரசபையின் சார்பில் ஆகியோர் கலந்துகொண்டு சுடர்ஏற்றி மலர்வணக்கம் செலுத்தியதுடன் நினைவுரைகளையும் ஆற்றியிருந்தனர்.
நிறைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)

பிரான்சு சுவசி லு றுவா நகரில் மே 18 தமிழின அழிப்புக்கு நீதிகோரிய கவனயீர்ப்பு நிகழ்வு‌ பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் சுவசி லு றுவா பிராங்கோ தமிழ்ச்சங்கத்தினால் இன்று (15.05.2024) புதன்கிழமை பிற்பகல் 14.00 மணிமுதல் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சுடர் ஏற்றப்பட்டு அவணக்கம், மலர்வணக்கம் என்பனவும் இடம்பெற்றன. சுவசி லு றுவா துணை நகர முதல்வர்
கலாசாரம் – வரலாற்று பாரம்பரியம் பொறுப்பாளர் சுவசி லு றுவா நகரசபை உறுப்பினர்
படைவீரர் விவகாரங்கள் – நினைவகம் – மனித உரிமைகள் பொறுப்பாளர் ஆகியோரும் கலந்துகொண்டு சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தியிருந்தனர். நிறைவாக அனைவருக்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.