ரஷியாவில் ஊழல் குற்றச்சாட்டில் பாதுகாப்பு துறை அதிகாரி கைது

16 0

ரஷிய பாதுகாப்பு துறையில் இயக்குனரக தலைவராக பணியாற்றி வருபவர் லெப்டினன்ட் ஜெனரல் யூரி குஸ்னெட்சோவ். கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த பதவி வகித்து வரும் இவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

அதன்பேரில் போலீசார் அவரை கைது செய்தனர்.இதற்கிடையே அவரது வீடு மற்றும் தொடர்புடைய பல்வேறு இடங்களிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

இதில் சுமார் ரூ.8 கோடி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. பாதுகாப்பு துறை மந்திரி ஷெர்ஜி ஷோய்கு மாற்றப்பட்ட நிலையில் தற்போது அதிரடியாக அந்த துறை உயர் அதிகாரி கைது செய்யப்பட்டு இருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.