பிரான்சில் 2 போலீஸ் அதிகாரிகளை சுட்டுக்கொன்று கைதியை மீட்டு சென்ற கும்பல்

48 0

பிரான்சின் தெற்கு நகரமான மார்சேயில் கொள்ளை சம்பவம் தொடர்பாக முகமது அம்ரா என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இதற்கிடையே அவரை கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜர் படுத்திவிட்டு ஜெயிலுக்கு போலீசார் அழைத்து சென்று கொண்டிருந்தனர்.

முகமது அம்ரா அழைத்து செல்லப்பட்ட சிறைத்துறை வேன், வடக்கு பிரான்சின் இன்கார்வில்லே பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் நின்றது. அப்போது அங்கு கார்களில் கும்பல் ஒன்று வந்தது. அவர்கள் சிறைத்துறை வேன் மீது தங்களது வாகனங்களை மோதினர்.முகமுடி அணிந்திருந்த அக்கும்பலை சேர்ந்தவர்கள், போலீசார் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

இந்ந தாக்குதலில் 2 போலீஸ் அதிகாரிகள் பலியானார்கள். 3 பேர் காயம் அடைந்தனர். உடனே சிறைத்துறை வேனில் இருந்த கைதி முகமது அம்ராவை அக்கும்பல் மீட்டு கொண்டு தப்பி சென்றது.இச்சம்பவம் பிரான்சில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. முகமது அம்ரா மற்றும் அவரை மீட்டு சென்ற கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இதில் நூற்றுக்கணக்கான பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.இதுகுறித்து அதிபர் இம்மானுவேல் மெக்ரான் கூறும்போது, “குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன ” என்றார்.