கல்கிசையில் வங்கி ஒன்றிலிருந்து பணத்தை எடுத்துக் கொண்டு வீடு திரும்பிய வயோதிபரிடம் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
சம்பவம் புதன்கிழமை (08) இடம் பெற்றுள்ளது.
92 வயதுடைய வயோதிபர் வங்கியிலிருந்து 40,000 ரூபா பணத்தை எடுத்துக் கொண்டு வீடு திரும்பிய நிலையில் நபரொருவர் அவரை தாக்கி பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளார்.
இந்த சம்பவம் சிரிரிவி கமராவில் பதிவாகியுள்ளது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.