லொறி – கெப் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் பலி ; 9 பேர் காயம்

162 0

தம்புள்ளை, திகம்பதஹ பிரதேசத்தில்  லொறி ஒன்றும் கெப் வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்  9 பேர் காயமடைந்துள்ளதாகச் சிகிரியா பொலிஸார் தெரிவித்தனர்.

ஹபரணை, ஹிரிவட்டுன்ன  பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயது பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

ஹபரணையிலிருந்து தம்புள்ளை நோக்கிப் பயணித்த லொறி ஒன்றும் திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்டு  மீண்டும் வீடு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த கெப் வண்டி ஒன்றும் நேருக்கு நேர்  மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது 9 பேர் காயமடைந்துள்ள நிலையில் தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மூன்று வயது சிறுமியொருவர் மேலதிக சிகிச்சைக்காகக் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கெப் வண்டி சாரதியின் கவனக்குறைவே இந்த விபத்துக்குக் காரணம் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சிகிரியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.