ஜேர்மனியில் இலங்கையைச் சேர்ந்தவர் WSO2 மென்பொருள் நிறுவனம் நடத்திய “WSO2CodeChallenge” போட்டியில் பங்கு பற்றி டெஸ்லா சைபர் டிரக் காரை பரிசாக வென்றுள்ளார்.
இந்த போட்டி மே மாதம் 7 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை புளோரிடாவின் செமினோல் ஹார்ட் ராக் ஹோட்டல் மற்றும் கேசினோ ஹாலிவுட்டில் நடைபெற்றது.
WSO2 மென்பொருள் நிறுவனம் டிஜிட்டல் வளர்ச்சி மாற்றத்திற்கான தொழில்நுட்பத்தில் முன்னிலை வகித்து வருகின்றது.
உலகில் பல நூற்றுக்கணக்கான பெரிய நிறுவனங்கள், முதன்மையான பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசாங்கங்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான நிறுவனங்கள் தங்கள் டிஜிட்டல் வளர்ச்சி மாற்றத்தை முன்னெடுத்துச் செல்வதில் WSO2 முக்கிய பங்கு வகிக்கின்றது.
ஆண்டுதோறும், WSO2 வியக்கத்தக்க 60 டிரில்லியன் பரிவர்த்தனைகளைச் செய்கின்றது. அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு பில்லியனுக்கும் அதிகமான அடையாளங்களை நிர்வகிக்கிறது.
பயன்பாட்டு நிரலாக்க இடைமுகங்கள் (API) முகாமைத்துவம், ஒருங்கிணைப்பு மற்றும் வாடிக்கையாளர் அடையாளம் மற்றும் அணுகல் முகாமைத்துவம் (CIAM) ஆகியவற்றிற்கு WSO2 ஐப் பயன்படுத்தி, இந்த நிறுவனங்கள் தங்கள் டிஜிட்டல் சேவைகள் மற்றும் பயன்பாடுகளை பாதுகாப்பாக வழங்க தங்கள் API களின் முழுமையான ஆற்றலையும் பயன்படுத்துகின்றன.

