திருகோணமலை மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வருமானத்தை பெற்றுத்தரும் தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும் நோக்கோடு திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கமானது 11 குடும்பங்களுக்கும் தலா ஒன்றரை இலட்சம் ரூபாய் பெறுமதியான நீர் இறைக்கும் இயந்திரக் குழாய்கள் மற்றும் தூவல் நீர்ப்பாசனக் கருவிகளை ஒரு மாத காலப்பகுதியில் மூன்றாவது முறையாக நேற்று (08) வழங்கியது.
இவற்றை திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத் தலைவர் சண்முகம் குகதாசன் திருகோணமலையில் வழங்கிவைத்தார்.
பெண் தலைமைத்துவ குடும்பங்களின் அன்றாட ஜீவனோபாயத்துக்கான ஒரு ஊக்குவிப்பாக இத்தொழில் வாய்ப்புகள் காணப்படுகின்றன.

