பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர் போதைப்பொருளுடன் கைது

121 0

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்னேவ பொலிஸார் தெரிவித்தனர்.

கல்னேவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கல்னேவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்னேவ பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கடந்த 8 ஆம் திகதி 480,000 ரூபா பணத்தைத் திருடியுள்ளதாகவும், கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28ஆம் திகதி போலி மாணிக்கக் கல்லை விற்பனை செய்து 975,000 ரூபா பண மோசடி செய்துள்ளதாகவும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணையில் சந்தேக நபரிடமிருந்து 2 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்னேவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.