ரயிலில் மோதி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (8) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவரது சடலம் மருதானை ரயில் நிலையத்திற்கு அருகில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குடும்ப தகராறு காரணமாக இவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகச் சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

