பெர்லினில் பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் 140 பேர் கைது

20 0

ஜேர்மன் தலைநகர் பெர்லினில் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோரை பொலிஸார் கைது செய்தனர்.

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்து, ஜேர்மனியில் 20 கூடாரங்களை அமைத்த ஆர்வலர்கள், அவற்றைச் சுற்றி மனிதச் சங்கிலியை அமைத்தனர்.

இந்த நிலையில் தலைநகர் பெர்லினில் பெரும்பாலானோர் மருத்துவ முகமூடிகளால் முகத்தை மூடிக்கொண்டு, தலையில் Keffiyeh Scarvesஐ சுற்றிக்கொண்டு ”விவா, விவா பாலஸ்தீனா” என முழக்கங்களை எழுப்பினர்.

ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தில் இதேபோன்ற பாலஸ்தீன ஆதரவு முகாமை உடைத்ததால், சுமார் 140 ஆர்வலர்களை பொலிஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து அல் ஜசீரா ஊடகவியலாளர் கூறுகையில், ”மக்களின் கோரிக்கைகள் மிகவும் தெளிவாக இருந்தன, அடிப்படையில் ஜேர்மனி உலகெங்கிலும் உள்ள எதிர்ப்பு இயக்கத்தில் பங்கேற்க வேண்டிய நேரம் இது. காஸாவில் நடைபெறுவதாக அவர்கள் கூறும் இனப்படுகொலை நிறுத்தப்பட வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்” என்றார்.

இதற்கிடையில், ஆர்பாட்டக்காரர்கள் எந்தவிதமான உரையாடலையும் நிராகரித்ததாகவும், எனவே அவர்களை வெளியேற்ற பல்கலைக்கழக நிர்வாகிகள் அறிக்கை ஒன்றில் தெரிவித்தனர்.